×
الأنعامவசனம் 70

அல்-முக்தஸர்

وَذَرِ ٱلَّذِينَ ٱتَّخَذُوا۟ دِينَهُمْ لَعِبًا وَلَهْوًا وَغَرَّتْهُمُ ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَا ۚ وَذَكِّرْ بِهِۦٓ أَن تُبْسَلَ نَفْسٌۢ بِمَا كَسَبَتْ لَيْسَ لَهَا مِن دُونِ ٱللَّهِ وَلِىٌّ وَلَا شَفِيعٌ وَإِن تَعْدِلْ كُلَّ عَدْلٍ لَّا يُؤْخَذْ مِنْهَآ ۗ أُو۟لَـٰٓئِكَ ٱلَّذِينَ أُبْسِلُوا۟ بِمَا كَسَبُوا۟ ۖ لَهُمْ شَرَابٌ مِّنْ حَمِيمٍ وَعَذَابٌ أَلِيمٌۢ بِمَا كَانُوا۟ يَكْفُرُونَ ﴿٧٠﴾

தூதரே! தங்களின் மார்க்கத்தைப் பரிகாசம் செய்து வீண் விளையாட்டாக ஆக்கிக் கொண்ட இந்த இணைவைப்பாளர்களை விட்டு விடுவீராக. இவ்வுலகில் உள்ள அற்ப இன்பங்கள் அவர்களை ஏமாற்றிவிட்டது. தூதரே! எவரும் தாம் செய்த தீமைகளின் காரணமாக அழிந்து விடாமல் இருக்க மக்களுக்கு இந்த குர்ஆனைக் கொண்டு அறிவுரை வழங்குவீராக. மறுமை நாளில் அல்லாஹ்வைத் தவிர உதவி செய்யும் உதவியாளனோ அவனுடைய வேதனையிலிருந்து தடுக்கக்கூடிய பரிந்துரையாளனோ யாரும் அவருக்கு இருக்க மாட்டார்கள். அல்லாஹ்வின் வேதனையிலிருந்து விடுபடுவதற்கு ஈடாக எதையேனும் வழங்கினால் அதுவும் ஏற்றுக் கொள்ளப்படாது. மறுமை நாளில், தாங்கள் செய்த பாவங்களின் காரணமாக தன்னை அழிவில் போட்டுக் கொண்டவர்களுக்கு அவர்களது நிராகரிப்பின் காரணமாக கொதிக்கும் நீரும் வேதனைமிக்க தண்டனையும் உண்டு.