அல்-முக்தஸர்
وَهُوَ ٱلَّذِى خَلَقَ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضَ بِٱلْحَقِّ ۖ وَيَوْمَ يَقُولُ كُن فَيَكُونُ ۚ قَوْلُهُ ٱلْحَقُّ ۚ وَلَهُ ٱلْمُلْكُ يَوْمَ يُنفَخُ فِى ٱلصُّورِ ۚ عَـٰلِمُ ٱلْغَيْبِ وَٱلشَّهَـٰدَةِ ۚ وَهُوَ ٱلْحَكِيمُ ٱلْخَبِيرُ ﴿٧٣﴾
அவன்தான் வானங்களையும் பூமியையும் சத்தியத்தைக் கொண்டு படைத்துள்ளான். அவன் ஏதேனும் ஒன்றைப் பார்த்து ஆகிவிடு என்று கூறும் நாளில் அது ஆகிவிடும். அவன் மறுமைநாளில், ‘எழுந்திருங்கள்’ என்று கூறுவான். அவர்கள் எழுந்திருப்பார்கள். அவனது சொல் நிச்சயமாக நிறைவேறியே தீரும் உண்மையான சொல்லாகும். இஸ்ராஃபீல் இரண்டாது சூர் ஊதும் மறுமை நாளில் ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. வெளிப்படையானதையும் மறைவானதையும் அவன் நன்கறிந்தவன். தன் படைப்பில், நிர்வாகத்தில் அவன் ஞானம்மிக்கவன். அனைத்தையும் அறிந்தவன், எந்த ஒன்றும் அவனை விட்டு மறையாது. மறைவானவையும் அவனிடத்தில் வெளிப்படையானவை போன்றவையே.