×
الأنعامவசனம் 75

அல்-முக்தஸர்

وَكَذَٰلِكَ نُرِىٓ إِبْرَٰهِيمَ مَلَكُوتَ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ وَلِيَكُونَ مِنَ ٱلْمُوقِنِينَ ﴿٧٥﴾

அவரது தந்தை மற்றும் சமூகத்தின் வழிகேட்டை அவருக்குக் காட்டியது போல அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்குத் தகுதியானவன் என்பதை அறிவிக்கக்கூடிய வானங்கள் மற்றும் பூமியின் விசாலமான ஆட்சியதிகாரத்தை அவருக்குக் காட்டினோம். அல்லாஹ் ஒருவனே, அவன் மாத்திரமே வணக்கத்திற்குரியவன் என்பதை அறிந்து, அவனுக்கு யாதொரு இணையுமில்லை, அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன் என்பதை உறுதியாக நம்பியவர்களில் ஒருவராக ஆகவேண்டும் என்பதற்காகத்தான் நாம் அவற்றையெல்லாம் அவருக்குக் காட்டினோம்.