×
الأنعامவசனம் 89

அல்-முக்தஸர்

أُو۟لَـٰٓئِكَ ٱلَّذِينَ ءَاتَيْنَـٰهُمُ ٱلْكِتَـٰبَ وَٱلْحُكْمَ وَٱلنُّبُوَّةَ ۚ فَإِن يَكْفُرْ بِهَا هَـٰٓؤُلَآءِ فَقَدْ وَكَّلْنَا بِهَا قَوْمًا لَّيْسُوا۟ بِهَا بِكَـٰفِرِينَ ﴿٨٩﴾

மேற்கூறப்பட்ட இந்த தூதர்களுக்குத்தான் நாம் வேதங்களையும் ஞானத்தையும் தூதுத்துவத்தையும் வழங்கினோம். நாம் அவர்களுக்கு வழங்கிய இம்மூன்று விஷயங்களையும் உமது சமூகம் நிராகரித்தால் அவற்றை நிராகரிக்காத வேறு மக்களை நாம் அவற்றிற்காக தயார்படுத்தி வைத்துள்ளோம். அவர்கள் அவற்றை நம்பிக்கைகொண்டவர்களாக, உறுதியாக பற்றிப் பிடித்துக் கொள்பவர்கள். அவர்கள்தாம் முஹாஜிர்களும் அன்சாரிகளும் மறுமை நாள் வரை அவர்களை சிறந்த முறையில் பின்பற்றியவர்களுமாவர்.