அல்-முக்தஸர்
وَمَا قَدَرُوا۟ ٱللَّهَ حَقَّ قَدْرِهِۦٓ إِذْ قَالُوا۟ مَآ أَنزَلَ ٱللَّهُ عَلَىٰ بَشَرٍ مِّن شَىْءٍ ۗ قُلْ مَنْ أَنزَلَ ٱلْكِتَـٰبَ ٱلَّذِى جَآءَ بِهِۦ مُوسَىٰ نُورًا وَهُدًى لِّلنَّاسِ ۖ تَجْعَلُونَهُۥ قَرَاطِيسَ تُبْدُونَهَا وَتُخْفُونَ كَثِيرًا ۖ وَعُلِّمْتُم مَّا لَمْ تَعْلَمُوٓا۟ أَنتُمْ وَلَآ ءَابَآؤُكُمْ ۖ قُلِ ٱللَّهُ ۖ ثُمَّ ذَرْهُمْ فِى خَوْضِهِمْ يَلْعَبُونَ ﴿٩١﴾
இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வை கண்ணியப்படுத்த வேண்டிய முறைப்படி கண்ணியப்படுத்தவில்லை. அதனால்தான் அவர்கள் தங்களின் தூதர் முஹம்மதிடம் கூறினார்கள்: “அல்லாஹ் மனிதன் மீது எந்த வஹியையும் இறக்கவில்லை. தூதரே! நீர் அவர்களிடம் கூறுவீராக: “மூஸாவுக்கு தவ்ராத் என்னும் வேதத்தை இறக்கியவன் யார்? அது அவருடைய சமூகத்தினருக்கு ஒளியாகவும் வழிகாட்டியாகவும் இருந்ததே! யூதர்கள் அதனை ஏடுகளில் வைத்து அதில் தங்கள் மனஇச்சைக்கு ஒத்துப் போகக்கூடியவற்றை வெளிப்படுத்துகின்றனர். முஹம்மது நபியின் வர்ணனைகள் போன்ற தமது மனஇச்சைக்கு மாற்றமானதை மறைக்கின்றனர். அரேபியர்களே! நீங்களும் உங்கள் முன்னோர்களும் அறியாதவற்றையெல்லாம் இந்த குர்ஆனின் மூலம் கற்றுக் கொடுக்கப்பட்டீர்கள். தூதரே! “அல்லாஹ்தான் அதனை இறக்கினான்” என்று நீர் அவர்களிடம் கூறுவீராக. பின்னர் அவர்களுக்கு மரணம் வரும்வரை அவர்களின் வழிகேட்டிலும் அறியாமையிலும் பரிகாசம்செய்தவர்களாக அவர்களை விட்டுவிடுவீராக.