×
الأنعامவசனம் 93

அல்-முக்தஸர்

وَمَنْ أَظْلَمُ مِمَّنِ ٱفْتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبًا أَوْ قَالَ أُوحِىَ إِلَىَّ وَلَمْ يُوحَ إِلَيْهِ شَىْءٌ وَمَن قَالَ سَأُنزِلُ مِثْلَ مَآ أَنزَلَ ٱللَّهُ ۗ وَلَوْ تَرَىٰٓ إِذِ ٱلظَّـٰلِمُونَ فِى غَمَرَٰتِ ٱلْمَوْتِ وَٱلْمَلَـٰٓئِكَةُ بَاسِطُوٓا۟ أَيْدِيهِمْ أَخْرِجُوٓا۟ أَنفُسَكُمُ ۖ ٱلْيَوْمَ تُجْزَوْنَ عَذَابَ ٱلْهُونِ بِمَا كُنتُمْ تَقُولُونَ عَلَى ٱللَّهِ غَيْرَ ٱلْحَقِّ وَكُنتُمْ عَنْ ءَايَـٰتِهِۦ تَسْتَكْبِرُونَ ﴿٩٣﴾

‘அல்லாஹ் மனிதன் மீது எந்த ஒன்றையும் இறக்கவில்லை’ அல்லது அல்லாஹ் ஒரு மனிதனுக்கு வஹி அறிவிக்காத நிலையில் அவன் எனக்கு வஹி அறிவித்துள்ளான் என்று கூறுவது அல்லது ‘அல்லாஹ் குர்ஆனை இறக்கியது போல நானும் இறக்குவேன்’ என்று கூறி அல்லாஹ்வின் மீது அபாண்டமாக பொய் கூறுபவர்களை விட மிகப் பெரிய அக்கிரமக்காரன் யாரும் இல்லை. தூதரே! நீர் இந்த அநியாயக்காரர்களை அவர்களுக்கு மரணம் நேரும் வேளையில் காணவேண்டுமே! வானவர்கள் தங்கள் கைகளால் அவர்களை அடித்தவர்களாக, வேதனைப்படுத்தியவர்களாகக் கூறுவார்கள், “உங்களின் உயிர்களை நீங்களே வெளியேற்றுங்கள். நாங்கள் அவற்றைக் கைப்பற்றிக் கொள்வோம். நபித்துவம், இறை அறிவிப்பு, அல்லாஹ் இறக்கியது போன்று இறக்குவேன் என்று வாதிட்டு அபாண்டமாக அல்லாஹ்வின் மீது பொய் கூறியதனாலும் அல்லாஹ்வின் சான்றுகளை நம்பாமல் கர்வம் கொண்டதனாலும் இன்றைய தினம் உங்களுக்கு இழிவுதரும் வேதனையை கூலியாக வழங்குவோம். அதனை நீர் இழிவான நிலைமையில் பார்ப்பீர்.