×
الأعرافவசனம் 129

அல்-முக்தஸர்

قَالُوٓا۟ أُوذِينَا مِن قَبْلِ أَن تَأْتِيَنَا وَمِنۢ بَعْدِ مَا جِئْتَنَا ۚ قَالَ عَسَىٰ رَبُّكُمْ أَن يُهْلِكَ عَدُوَّكُمْ وَيَسْتَخْلِفَكُمْ فِى ٱلْأَرْضِ فَيَنظُرَ كَيْفَ تَعْمَلُونَ ﴿١٢٩﴾

மூஸாவின் சமூகத்தவரான இஸ்ரவேலர்கள் அவரிடம் கூறினார்கள்: “மூசாவே! நீர் எங்களிடம் வருவதற்கு முன்பும் பின்பும் எங்களின் ஆண்மக்கள் கொல்லப்பட்டு பெண்மக்கள் உயிருடன் விடப்பட்டு பிர்அவ்னால் நாங்கள் சோதிக்கப்பட்டோம்.” மூஸா அவர்களுக்கு அறிவுரை வழங்கியவராக, விடுதலையைக் கொண்டு நற்செய்தி வழங்கியவராகக் கூறினார்: “உங்களின் இறைவன் உங்களின் எதிரியான பிர்அவ்னையும் அவனது சமூகத்தையும் அழித்துவிடலாம். அதன்பிறகு பூமியில் உங்களுக்கு ஆட்சியதிகாரத்தை வழங்கி, அதன் பின் நீங்கள் நன்றி செலுத்துகிறீர்களா அல்லது நன்றி கெட்டத்தனமாக நடந்துகொள்கிறீர்களா என்பதைப் பார்ப்பான்.