×
الأعرافவசனம் 138

அல்-முக்தஸர்

وَجَـٰوَزْنَا بِبَنِىٓ إِسْرَٰٓءِيلَ ٱلْبَحْرَ فَأَتَوْا۟ عَلَىٰ قَوْمٍ يَعْكُفُونَ عَلَىٰٓ أَصْنَامٍ لَّهُمْ ۚ قَالُوا۟ يَـٰمُوسَى ٱجْعَل لَّنَآ إِلَـٰهًا كَمَا لَهُمْ ءَالِهَةٌ ۚ قَالَ إِنَّكُمْ قَوْمٌ تَجْهَلُونَ ﴿١٣٨﴾

மூஸா தம் கைத்தடியால் கடலை அடித்து அது பிளந்த போது இஸ்ராயீலின் மக்களை நாம் அதனை கடக்கச் செய்தோம். அவர்கள் அல்லாஹ்வைத் தவிர சிலைகளை வணங்கிக் கொண்டிருந்த ஒரு சமூகத்தை கடந்து சென்ற போது மூஸாவிடம் கூறினார்கள்: “மூஸாவே! இவர்களுக்கு அல்லாஹ்வைத் தவிர வணங்கும் சிலைகள் இருப்பதைப் போல எங்களுக்கும் ஒரு வணங்கும் சிலையை ஏற்படுத்தித் தாரும்.” மூஸா அவர்களிடம் கூறினார்: “நீங்கள் அல்லாஹ்வுக்குரிய மகத்துவத்தையும் ஏகத்துவத்தையும் அவனுக்குப் பொருந்தாத இணைவைப்பையும், மற்றவர்களை வணங்குtதையும் அறியாத கூட்டமாக உள்ளீர்கள்.”