அல்-முக்தஸர்
وَلَمَّا جَآءَ مُوسَىٰ لِمِيقَـٰتِنَا وَكَلَّمَهُۥ رَبُّهُۥ قَالَ رَبِّ أَرِنِىٓ أَنظُرْ إِلَيْكَ ۚ قَالَ لَن تَرَىٰنِى وَلَـٰكِنِ ٱنظُرْ إِلَى ٱلْجَبَلِ فَإِنِ ٱسْتَقَرَّ مَكَانَهُۥ فَسَوْفَ تَرَىٰنِى ۚ فَلَمَّا تَجَلَّىٰ رَبُّهُۥ لِلْجَبَلِ جَعَلَهُۥ دَكًّا وَخَرَّ مُوسَىٰ صَعِقًا ۚ فَلَمَّآ أَفَاقَ قَالَ سُبْحَـٰنَكَ تُبْتُ إِلَيْكَ وَأَنَا۠ أَوَّلُ ٱلْمُؤْمِنِينَ ﴿١٤٣﴾
மூஸா குறிப்பிட்ட நேரத்தில் தம் இறைவனுடன் உரையாட வந்து, அது முழுமையான நாற்பது இரவுகளாகும் அவருடைய இறைவன் ஏவல்கள், விலக்கல்கள் மற்றும் ஏனைய விடயங்களை அவருடன் பேசிய போது, அவரது உள்ளம் தனது இறைவனைக் காண ஆவல் கொண்டது. எனவே அவனைப் பார்க்கவேண்டுமெனக் கோரினார். அதற்கு அல்லாஹ் பின்வருமாறு விடையளித்தான், “இவ்வுலக வாழ்வில் நீர் அதற்குச் சக்தி பெறாததால் என்னை ஒருபோதும் காண முடியாது. ஆயினும் அந்த மலையைப் பாரும். அதில் என் பேரொளி வெளிப்பட்டும் அது தன் இடத்தில் நிலைத்திருந்தால் நீர் என்னைக் காணலாம். அது பூமியோடு தரைமட்டமாகிவிட்டால் என்னைக் காணமுடியாது” என்றான். அல்லாஹ் அந்த மலையில் தன் பேரொளியை வெளிப்படுத்தியபோது அது தூள் தூளாகிவிட்டது. மூஸா மயங்கி கீழே விழுந்தார். மயக்கம் தெளிந்த போது அவர் கூறினார்: “என் இறைவா, உனக்குப் பொருத்தமற்ற எல்லாவற்றையும் விட்டு நான் உன்னைத் தூய்மைப்படுத்துகிறேன். இவ்வுலகில் உன்னைப் பார்க்க வேண்டும் என்று நான் கேட்டதற்காக உன்னிடம் பாவமன்னிப்புக் கோருகிறேன். என் சமூகத்தில் நம்பிக்கைகொண்டவர்களில் நானே முதலாமவனாவேன்.”