×
الأعرافவசனம் 150

அல்-முக்தஸர்

وَلَمَّا رَجَعَ مُوسَىٰٓ إِلَىٰ قَوْمِهِۦ غَضْبَـٰنَ أَسِفًا قَالَ بِئْسَمَا خَلَفْتُمُونِى مِنۢ بَعْدِىٓ ۖ أَعَجِلْتُمْ أَمْرَ رَبِّكُمْ ۖ وَأَلْقَى ٱلْأَلْوَاحَ وَأَخَذَ بِرَأْسِ أَخِيهِ يَجُرُّهُۥٓ إِلَيْهِ ۚ قَالَ ٱبْنَ أُمَّ إِنَّ ٱلْقَوْمَ ٱسْتَضْعَفُونِى وَكَادُوا۟ يَقْتُلُونَنِى فَلَا تُشْمِتْ بِىَ ٱلْأَعْدَآءَ وَلَا تَجْعَلْنِى مَعَ ٱلْقَوْمِ ٱلظَّـٰلِمِينَ ﴿١٥٠﴾

மூஸா தம் இறைவனிடம் தனிமையில் உரையாடிய பின், தன் சமூகத்தார் காளைக் கன்றை வணங்கியதனால் கோபத்தாலும் கவலையாலும் கொந்தளித்தவராக அவர்களிடம் திரும்பிய போது கூறினார்: “என் சமூகமே! நான் உங்களை விட்டு சென்ற பிறகு உங்களுக்கு ஏற்பட்ட நிலமை மோசமானதாகும். ஏனெனில் அது அழிவுக்கும் துர்பாக்கியத்திற்கும் வழிவகுக்கும். என்னைக் காத்திருந்து சடைவடைந்ததனால், காளைக் கன்றை வணங்க ஆரம்பித்து விட்டீர்களா?” அவருக்கேற்பட்ட கடுமையான கவலையினாலும் கோபத்தினாலும் அவர் பலகைகளை எறிந்தார். அவர்களுடன் கூட இருந்தும், அவர்கள் காளைக் கன்றை வணங்கியதைத் தடுக்காமலிருந்த காரணத்தினால் தம் சகோதரர் ஹாரூனின் தலையையும் தாடியையும் பிடித்து இழுத்தார். அவர் மூஸாவிடம் மன்னிப்புக்கேட்டவராகவும் மன்றாடியவராகவும் கூறினார்: “என் தாயின் மகனே! நிச்சயமாக சமூகத்தினர் என்னை பலவீனமானவனாகக் கருதி, என்னை இழிவாக எண்ணி விட்டனர். அவர்கள் என்னைக் கொல்ல எத்தனித்தனர். எனவே எனது எதிரிகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் தண்டனையை எனக்கு அளித்துவிடாதீர். என் மீது கோபப்பட்டு காரணமாக அல்லாஹ் அல்லாதவற்றை வணங்கிய அநியாயக்கார சமூகத்துடன் என்னை சேர்த்துவிடாதீர்.