அல்-முக்தஸர்
وَإِذْ قِيلَ لَهُمُ ٱسْكُنُوا۟ هَـٰذِهِ ٱلْقَرْيَةَ وَكُلُوا۟ مِنْهَا حَيْثُ شِئْتُمْ وَقُولُوا۟ حِطَّةٌ وَٱدْخُلُوا۟ ٱلْبَابَ سُجَّدًا نَّغْفِرْ لَكُمْ خَطِيٓـَٔـٰتِكُمْ ۚ سَنَزِيدُ ٱلْمُحْسِنِينَ ﴿١٦١﴾
தூதரே! அல்லாஹ் இஸ்ராயீலின் மக்களிடம் கூறியதை நினைவுகூர்வீராக: “நீங்கள் பைத்துல் முகத்தஸில் நுழையுங்கள். அந்த ஊரின் விளைச்சல்களில் எந்த இடத்திலிருந்து, எந்த நேரத்தில் விரும்பினாலும் உண்ணுங்கள். “எங்கள் இறைவா! எங்கள் பாவங்களை மன்னித்து விடுவாயாக” என்று கூறுங்கள். உங்கள் இறைவனுக்கு அடிபணிந்தவர்களாக வாயிலில் நுழையுங்கள். நீங்கள் அவ்வாறு செய்தால் நாம் உங்கள் பாவங்களை மன்னிப்போம். நன்மை செய்வோருக்கு இவ்வுலக மறுவுலக நன்மைகளை அதிகரித்து வழங்குவோம்.