அல்-முக்தஸர்
وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنۢ بَنِىٓ ءَادَمَ مِن ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَىٰٓ أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ ۖ قَالُوا۟ بَلَىٰ ۛ شَهِدْنَآ ۛ أَن تَقُولُوا۟ يَوْمَ ٱلْقِيَـٰمَةِ إِنَّا كُنَّا عَنْ هَـٰذَا غَـٰفِلِينَ ﴿١٧٢﴾
தூதரே! ஆதமின் மக்களின் முதுகந்தண்டுகளிலிருந்து அவர்களது சந்ததிகளை உம் இறைவன் வெளியாக்கியதை நினைவுகூர்வீராக. தானே படைத்துப் பரிபாலிப்பவன் என்பதை அவர்களின் இயல்பில் அவன் வைத்ததன் மூலம் தனது தெய்வீகத்தன்மையை ஏற்றுக்கொள்ளச் செய்யுமுகமாக அவர்களிடம், “நான் உங்கள் இறைவன் இல்லையா?” என்று கேட்டான். அவர்கள் அனைவரும், ”ஆம். நிச்சயமாக நீதான் எங்களின் இறைவன்” என்றார்கள். அல்லாஹ் கூறினான்: “உங்களுக்கெதிரான அல்லாஹ்வின் ஆதாரத்தை நீங்கள் மறுத்து, மறுமை நாளில் ‘இது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது’ என்று கூறிவிடக் கூடாது என்பதற்காக நாம் உங்களை சோதித்து உங்களிடம் வாக்குறுதி வாங்கிவிட்டோம்.”