அல்-முக்தஸர்
أَوَلَمْ يَنظُرُوا۟ فِى مَلَكُوتِ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا خَلَقَ ٱللَّهُ مِن شَىْءٍ وَأَنْ عَسَىٰٓ أَن يَكُونَ قَدِ ٱقْتَرَبَ أَجَلُهُمْ ۖ فَبِأَىِّ حَدِيثٍۭ بَعْدَهُۥ يُؤْمِنُونَ ﴿١٨٥﴾
வானங்களிலும் பூமியிலும் காணப்படும் அல்லாஹ்வின் ஆட்சியை படிப்பினை பெறும் நோக்கோடு அவர்கள் சிந்திக்கவில்லையா? அவற்றில் அல்லாஹ் படைத்த உயிரினங்கள், தாவரங்கள், ஏனையவற்றை அவர்கள் பார்க்கவில்லையா? தங்களின் தவணைகள் நெருங்கிவிட்டன. அதற்குள் அல்லாஹ்வின்பால் மீண்டுவிட வேண்டும் என்பது குறித்து அவர்கள் சிந்திக்கவில்லையா? இந்த குர்ஆனின் மீதும் அதிலுள்ள வாக்குறுதி மற்றும் எச்சரிக்கையை அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லையென்றால் வேறு எந்த வேதத்தின் மீது அவர்கள் நம்பிக்கை கொள்ளப்போகிறார்கள்?