×
الأعرافவசனம் 187

அல்-முக்தஸர்

يَسْـَٔلُونَكَ عَنِ ٱلسَّاعَةِ أَيَّانَ مُرْسَىٰهَا ۖ قُلْ إِنَّمَا عِلْمُهَا عِندَ رَبِّى ۖ لَا يُجَلِّيهَا لِوَقْتِهَآ إِلَّا هُوَ ۚ ثَقُلَتْ فِى ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ لَا تَأْتِيكُمْ إِلَّا بَغْتَةً ۗ يَسْـَٔلُونَكَ كَأَنَّكَ حَفِىٌّ عَنْهَا ۖ قُلْ إِنَّمَا عِلْمُهَا عِندَ ٱللَّهِ وَلَـٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يَعْلَمُونَ ﴿١٨٧﴾

இந்த பிடிவாதம் மிக்க நிராகரிப்பாளர்கள் மறுமை நாளைக் குறித்து அது எப்போது நிகழும் என்று உம்மிடம் கேட்கிறார்கள். முஹம்மதே! நீர் கூறுவீராக: “என்னிடமோ மற்றவர்களிடமோ அது குறித்த அறிவு இல்லை. அல்லாஹ் மட்டுமே அதனைக் குறித்து அறிவான். நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் அல்லாஹ்வே அதனை வெளிப்படுத்துவான். வானங்களில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் அது தோன்றுவதை அறியமாட்டார்கள். அது திடீரென்றே உங்களிடம் வரும். நீர் மறுமையைக் குறித்து அறிவதில் ஆர்வம் கொண்டிருப்பது போல அதனைக் குறித்து உம்மிடம் கேட்கிறார்கள். உம் இறைவனைப் பற்றி நீர் நன்கறிந்துள்ளதால் நீர் அதனைப் பற்றி அவனிடம் கேட்க மாட்டீர் என்பதை அவர்கள் அறியவில்லை. முஹம்மதே! நீர் அவர்களிடம் கூறுவீராக: “மறுமை நாள் குறித்த அறிவு அல்லாஹ்விடம் மட்டுமே உள்ளது. ஆயினும் மனிதர்களில் பெரும்பாலோர் அதனை அறியமாட்டார்கள்.”