×
الأعرافவசனம் 200

அல்-முக்தஸர்

وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ ٱلشَّيْطَـٰنِ نَزْغٌ فَٱسْتَعِذْ بِٱللَّهِ ۚ إِنَّهُۥ سَمِيعٌ عَلِيمٌ ﴿٢٠٠﴾

தூதரே!- ஷைத்தான் உமக்கு ஏதேனும் ஊசலாட்டத்தை ஏற்படுத்தி விட்டதாக நீர் உணர்ந்தால் அல்லது நன்மையான செயலை விட்டும் உம்மைத் தடுத்தால் அல்லாஹ்வின்பால் அடைக்கலம் பெற்றுக் கொள்வீராக. அவனைப் பற்றிக் கொள்வீராக. ஏனெனில் நீர் கூறுவதை அவன் செவியேற்கக்கூடியவன். அவன் பக்கம் நீர் அடைக்கலம் தேடுவதை அவன் நன்கறிந்தவன். அவன் ஷைத்தானிடமிருந்து உம்மைப் பாதுகாப்பான்.