அல்-முக்தஸர்
يَـٰبَنِىٓ ءَادَمَ إِمَّا يَأْتِيَنَّكُمْ رُسُلٌ مِّنكُمْ يَقُصُّونَ عَلَيْكُمْ ءَايَـٰتِى ۙ فَمَنِ ٱتَّقَىٰ وَأَصْلَحَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ ﴿٣٥﴾
ஆதமுடைய மக்களே! உங்களின் சமூகங்களிலிருந்து என் தூதர்கள் உங்களிடம் வந்து நான் அவர்களுக்கு இறக்கிய எனது வேதத்தை உங்களுக்கு ஓதிக் காட்டினால் நீங்கள் அவர்களுக்குக் கட்டுப்படுங்கள்; அவர்கள் கொண்டு வந்ததைப் பின்பற்றுங்கள். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சி, தங்களின் செயல்களை சீர்படுத்திக் கொண்டவர்கள் மறுமைநாளில் அச்சம்கொள்ள மாட்டார்கள். தவறிவிட்ட உலக பாக்கியங்களை எண்ணியும் அவர்கள் கவலைகொள்ள மாட்டார்கள்