அல்-முக்தஸர்
فَمَنْ أَظْلَمُ مِمَّنِ ٱفْتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبًا أَوْ كَذَّبَ بِـَٔايَـٰتِهِۦٓ ۚ أُو۟لَـٰٓئِكَ يَنَالُهُمْ نَصِيبُهُم مِّنَ ٱلْكِتَـٰبِ ۖ حَتَّىٰٓ إِذَا جَآءَتْهُمْ رُسُلُنَا يَتَوَفَّوْنَهُمْ قَالُوٓا۟ أَيْنَ مَا كُنتُمْ تَدْعُونَ مِن دُونِ ٱللَّهِ ۖ قَالُوا۟ ضَلُّوا۟ عَنَّا وَشَهِدُوا۟ عَلَىٰٓ أَنفُسِهِمْ أَنَّهُمْ كَانُوا۟ كَـٰفِرِينَ ﴿٣٧﴾
அல்லாஹ்வுக்கு இணை கற்பித்து அல்லது குறை கூறி அல்லது அவன் கூறாததைக் கூறி அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுபவனை விட அல்லது நேரான வழியைக் காட்டும் அவனுடைய வசனங்களை மறுப்பவனைவிட அக்கிரமக்காரன் வேறு யாருமில்லை. இந்த பண்புகளை உடையவர்கள், இவ்வுலக இன்பங்களில் லவ்ஹுல் மஃபூல் என்னும் ஏட்டில் தமக்கு எழுதப்பட்ட பங்கான நன்மை தீமையைப் பெறுவார்கள். இறுதியில் மரணத்தின் வானவரும் அவரது உதவியாளர்களும் அவர்களின் உயிர்களைக் கைப்பற்ற வரும் போது அவர்களைக் கண்டித்தவாறு அவர்களிடம் கேட்பார்கள், “அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்களெல்லாம் எங்கே? உங்களுக்குப் பயனளிப்பதற்காக அவற்றை அழையுங்கள்.” இணைவைப்பாளர்கள் வானவர்களிடம் கூறுவார்கள், “நாங்கள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்களெல்லாம் எங்களைவிட்டும் காணாமல் போய்விட்டன. அவை எங்கே இருக்கின்றன? என்று எங்களுக்குத் தெரியாது. தாங்கள் நிராகரிப்பாளர்களாக இருந்தோம் என்பதை அவர்களே ஒத்துக் கொள்வார்கள். ஆனால் அந்த சமயத்தில் அவர் ஏற்றுக் கொள்வது அவருக்கு எதிரான ஆதாரமாகவே அமையும். அது அவர்களுக்கு எந்தப் பயனையும் அளிக்காது.