×
الأعرافவசனம் 39

அல்-முக்தஸர்

وَقَالَتْ أُولَىٰهُمْ لِأُخْرَىٰهُمْ فَمَا كَانَ لَكُمْ عَلَيْنَا مِن فَضْلٍ فَذُوقُوا۟ ٱلْعَذَابَ بِمَا كُنتُمْ تَكْسِبُونَ ﴿٣٩﴾

பின்பற்றப்பட்ட தலைவர்கள் தங்களைப் பின்பற்றியவர்களிடம் கூறுவார்கள்: “வேதனை குறைக்கப்படும் அளவுக்கு எங்களை விட உங்களுக்கு எந்த சிறப்பும் இல்லை. நீங்கள் செய்த செயல்களே கவனத்தில் கொள்ளப்படும். அசத்தியத்தைப் பின்பற்றியதில் நீங்கள் எந்தச் சாக்குப் போக்கும் கூறமுடியாது. நாம் அனுபவிப்பதைப் போலவே, நீங்கள் செய்து கொண்டிருந்த நிராகரிப்பு மற்றும் பாவங்களினால் வேதனையை அனுபவியுங்கள்.”