×
الأعرافவசனம் 4

அல்-முக்தஸர்

وَكَم مِّن قَرْيَةٍ أَهْلَكْنَـٰهَا فَجَآءَهَا بَأْسُنَا بَيَـٰتًا أَوْ هُمْ قَآئِلُونَ ﴿٤﴾

நிராகரிப்பிலும் வழிகேட்டிலும் உறுதியாக நிலைத்திருந்த எவ்வளவோ ஊர்களை நம் வேதனையால் அழித்திருக்கின்றோம். அவர்கள் இரவிலோ பகலிலோ அலட்சியத்தில் ஆழ்ந்திருந்த போது கடுமையான நம்முடைய வேதனை அவர்கள் மீது இறங்கியது. அவர்களால் வேதனையை விட்டும் தங்களைக் காத்துக் கொள்ளவும் முடியவில்லை; அவர்களின் பொய்யான தெய்வங்களும் அவர்களைக் காப்பாற்றவில்லை.