அல்-முக்தஸர்
وَبَيْنَهُمَا حِجَابٌ ۚ وَعَلَى ٱلْأَعْرَافِ رِجَالٌ يَعْرِفُونَ كُلًّۢا بِسِيمَىٰهُمْ ۚ وَنَادَوْا۟ أَصْحَـٰبَ ٱلْجَنَّةِ أَن سَلَـٰمٌ عَلَيْكُمْ ۚ لَمْ يَدْخُلُوهَا وَهُمْ يَطْمَعُونَ ﴿٤٦﴾
சுவனவாசிகள், நரகவாசிகள் என்ற இந்த இரு பிரிவினருக்குமிடையே அஃராஃப் என்று அழைக்கப்படும் உயரமான ஒரு தடுப்பு உண்டு. அதன் மீது நற்செயல்களும் தீயசெயல்களும் சமமான சில மனிதர்கள் இருப்பார்கள். அவர்கள் சுவனவாசிகளை அவர்களின் பொலிவான முக அடையாளங்களைக் கொண்டும், நரகவாசிகளை அவர்களின் கருமையான முக அடையாளங்களைக் கொண்டும் அறிந்துகெள்வார்கள். இவர்கள் சுவனவாசிகளை கண்ணியப்படுத்தும் விதமாக அவர்களிடம், ‘உங்கள் மீது சாந்தி நிலவட்டும்’ என்று கூறுவார்கள். ஆனால் அஃராபில் உள்ள அவர்கள் இன்னும் சுவனத்தில் நுழையவேயில்லை. அல்லாஹ்வின் அருளினால் அதில் நுழைவதை எதிர்பார்த்த வண்ணமே இருப்பார்கள்.