அல்-முக்தஸர்
أَهَـٰٓؤُلَآءِ ٱلَّذِينَ أَقْسَمْتُمْ لَا يَنَالُهُمُ ٱللَّهُ بِرَحْمَةٍ ۚ ٱدْخُلُوا۟ ٱلْجَنَّةَ لَا خَوْفٌ عَلَيْكُمْ وَلَآ أَنتُمْ تَحْزَنُونَ ﴿٤٩﴾
நிராகரிப்பாளர்களைக் கண்டிக்கும் விதமாக அல்லாஹ் கூறுவான்: “இவர்களைக் குறித்துதானே ‘அல்லாஹ் இவர்களுக்கு அருள்புரியவே மாட்டான்’ என்று சத்தியம் செய்து கூறினீர்கள்.” நம்பிக்கையாளர்களிடம் அல்லாஹ் கூறுவான்: “நம்பிக்கையாளர்களே! நீங்கள் சுவனத்தில் நுழைந்து விடுங்கள். எதிர்காலத்தை எண்ணி உங்களுக்கு எந்த அச்சமும் இல்லை. உங்களுக்குக் கிடைக்கும் நிரந்தமான இன்பத்தினால் உங்களுக்குத் தவறிய உலக பாக்கியங்களுக்காக நீங்கள் கவலையடையவும் மாட்டீர்கள்.”