×
الأعرافவசனம் 62

அல்-முக்தஸர்

أُبَلِّغُكُمْ رِسَـٰلَـٰتِ رَبِّى وَأَنصَحُ لَكُمْ وَأَعْلَمُ مِنَ ٱللَّهِ مَا لَا تَعْلَمُونَ ﴿٦٢﴾

அல்லாஹ் எனக்குக் கொடுத்து அனுப்பிய இறைச்செய்தியை உங்களிடம் எடுத்துரைக்கிறேன். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்துவதற்கும் அதற்குக் கிடைக்கும் நன்மைகளிலும் உங்களுக்கு ஆர்வமூட்டுவதன் மூலமும், அவன் தடுத்துள்ளவற்றில் ஈடுபடுவதையும் அதற்குக் கிடைக்கும் தண்டனைகளைக் கொண்டு அச்சமூட்டுவதன் மூலமும் உங்களுக்கு நலவையே நான் நாடுகிறேன். அல்லாஹ்விடமிருந்து நீங்கள் அறியாததை அவன் எனக்கு அறிவிக்கும் வஹியின் மூலம் நான் அறிவேன்.