×
الأعرافவசனம் 71

அல்-முக்தஸர்

قَالَ قَدْ وَقَعَ عَلَيْكُم مِّن رَّبِّكُمْ رِجْسٌ وَغَضَبٌ ۖ أَتُجَـٰدِلُونَنِى فِىٓ أَسْمَآءٍ سَمَّيْتُمُوهَآ أَنتُمْ وَءَابَآؤُكُم مَّا نَزَّلَ ٱللَّهُ بِهَا مِن سُلْطَـٰنٍ ۚ فَٱنتَظِرُوٓا۟ إِنِّى مَعَكُم مِّنَ ٱلْمُنتَظِرِينَ ﴿٧١﴾

ஹூத் அவர்களிடம் கூறினார்: “அல்லாஹ்வின் வேதனையையும் கோபத்தையும் நீங்கள் உங்கள் மீது கடமையாக்கிக் கொண்டீர்கள். அது சந்தேகமில்லாமல் நிச்சயம் உங்களை அடைந்தே தீரும். எவ்வித யதார்த்தமும் இன்றி நீங்களும் உங்கள் முன்னோர்களும் தெய்வங்களாக பெயர்சூட்டிக்கொண்ட சிலைகளுக்காகவா என்னிடம் தர்க்கம் செய்கிறீர்கள்? அவைகளுக்கு தெய்வீகத்தன்மை உள்ளது என்பதற்கு ஆதாரம் கூறும் வகையில் அல்லாஹ் எந்தவொரு ஆதாரத்தையும் இறக்கிவைக்கவில்லை. நீங்கள் அவசரப்படும் வேதனையை எதிர்பாருங்கள். நானும் உங்களுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அது நிகழ்ந்தே தீரும்.