×
الأعرافவசனம் 74

அல்-முக்தஸர்

وَٱذْكُرُوٓا۟ إِذْ جَعَلَكُمْ خُلَفَآءَ مِنۢ بَعْدِ عَادٍ وَبَوَّأَكُمْ فِى ٱلْأَرْضِ تَتَّخِذُونَ مِن سُهُولِهَا قُصُورًا وَتَنْحِتُونَ ٱلْجِبَالَ بُيُوتًا ۖ فَٱذْكُرُوٓا۟ ءَالَآءَ ٱللَّهِ وَلَا تَعْثَوْا۟ فِى ٱلْأَرْضِ مُفْسِدِينَ ﴿٧٤﴾

ஆத் சமூகம் பொய் கூறி, நிராகரிப்பில் நிலைத்திருந்ததால் அவர்களை அழித்த பிறகு அவர்களுக்குப் பின் நீங்கள் தோன்றியுள்ளீர்கள். உங்களது இடத்தில் உங்களை வாழவைத்து, அதில் நீங்கள் அனுபவித்துக்கொண்டு, உங்களது தேவைகளை அடைந்துகொள்வோராக உங்களை ஆக்கி உங்களுக்கு அல்லாஹ் புரிந்த அருளை நினைத்துப்பாருங்கள். பூமியின் சமவெளிகளில் நீங்கள் மாளிகைகளைக் கட்டுகிறீர்கள். மலைகளைக் குடைந்து வீடுகளை அமைக்கிறீர்கள். அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு அவன் உங்கள் மீது பொழிந்த அருட்கொடைகளை நினைவுகூருங்கள். பூமியில் குழப்பம் விளைவித்துத் திரிவதை விட்டுவிடுங்கள். அது இறைவனை நிராகரிப்பதையும் பாவங்கள் புரிவதையும் விட்டுவிடுவதாகும்.