×
الأعرافவசனம் 79

அல்-முக்தஸர்

فَتَوَلَّىٰ عَنْهُمْ وَقَالَ يَـٰقَوْمِ لَقَدْ أَبْلَغْتُكُمْ رِسَالَةَ رَبِّى وَنَصَحْتُ لَكُمْ وَلَـٰكِن لَّا تُحِبُّونَ ٱلنَّـٰصِحِينَ ﴿٧٩﴾

தனது சமூகம் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று நம்பிக்கையிழந்த பிறகு ஸாலிஹ் அவர்களைப் புறக்கணித்துவிட்டார். அவர்களிடம் கூறினார்: “என் சமூகமே! அல்லாஹ் எனக்குக் கட்டளையிட்டதை நான் எடுத்துரைத்துவிட்டேன். உங்களுக்கு அச்சமூட்டி, ஆர்வமூட்டி அறிவுரை கூறிவிட்டேன். ஆயினும் நன்மையின்பால் ஆர்வமூட்டி தீமையை விட்டுத் தடுப்பதில் ஆர்வமுள்ள நலம் விரும்பிகளை நீங்கள் விரும்புவதில்லை.”