×
الأعرافவசனம் 85

அல்-முக்தஸர்

وَإِلَىٰ مَدْيَنَ أَخَاهُمْ شُعَيْبًا ۗ قَالَ يَـٰقَوْمِ ٱعْبُدُوا۟ ٱللَّهَ مَا لَكُم مِّنْ إِلَـٰهٍ غَيْرُهُۥ ۖ قَدْ جَآءَتْكُم بَيِّنَةٌ مِّن رَّبِّكُمْ ۖ فَأَوْفُوا۟ ٱلْكَيْلَ وَٱلْمِيزَانَ وَلَا تَبْخَسُوا۟ ٱلنَّاسَ أَشْيَآءَهُمْ وَلَا تُفْسِدُوا۟ فِى ٱلْأَرْضِ بَعْدَ إِصْلَـٰحِهَا ۚ ذَٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُم مُّؤْمِنِينَ ﴿٨٥﴾

மத்யன் சமூகத்தாரிடம் அவர்களது சகோதரர் ஸுஐபை அனுப்பினோம். அவர் கூறினார்: “என் சமூகமே! அல்லாஹ்வை மட்டுமே வணங்குங்கள். அவனைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியானவன் உங்களுக்கு வேறு யாருமில்லை. நான் என் இறைவனிடமிருந்து கொண்டு வந்ததை உண்மைப்படுத்தும் தெளிவான ஆதாரம் அல்லாஹ்விடமிருந்து உங்களிடம் வந்துள்ளது. அளவையும் நிறுவையையும் நிறைவாக்கி மக்களின் உரிமைகளை முழுமையாக அவர்களுக்கு வழங்கிவிடுங்கள். குறையுடைய பொருட்களை மக்களுக்கு வழங்கி அதில் குறைத்து அல்லது அவர்களை ஏமாற்றி குறை செய்து விடாதீர்கள். தூதர்களை அனுப்பி அல்லாஹ் பூமியை சீர்படுத்திய பிறகு நிராகரிப்பைக் கொண்டும் பாவங்களைக் கொண்டும் அதில் குழப்பம் விளைவிக்காதீர்கள். நீங்கள் நம்பிக்கைக் கொண்டிருந்தால் மேற்கூறப்பட்டவை அனைத்தும் உங்களுக்குச் சிறந்ததும் பயனளிக்கக்கூடியதுமாகும். ஏனெனில் அல்லாஹ் தடுத்துள்ளான் என்பதற்காக விலகி பாவங்களை விட்டு விடுவதும், ஏவப்பட்டதைச் செய்து அல்லாஹ்வை நெருங்குவதும் அதில் உள்ளது.