அல்-முக்தஸர்
فَتَوَلَّىٰ عَنْهُمْ وَقَالَ يَـٰقَوْمِ لَقَدْ أَبْلَغْتُكُمْ رِسَـٰلَـٰتِ رَبِّى وَنَصَحْتُ لَكُمْ ۖ فَكَيْفَ ءَاسَىٰ عَلَىٰ قَوْمٍ كَـٰفِرِينَ ﴿٩٣﴾
அவர்கள் அழிந்த போது அவர்களின் தூதர் ஸுஐப் அவர்களை விட்டுச் சென்றவராகக் கூறினார்: “என் சமூகமே! என் இறைவன் உங்களுக்கு எடுத்துரைக்குமாறு எனக்குக் கட்டளையிட்டதை நான் உங்களுக்கு எடுத்துரைத்துவிட்டேன். நான் உங்களுக்கு அறிவுரை வழங்கினேன். ஆனால் நீங்கள் என் அறிவுரையை ஏற்றுக்கொள்ளவில்லை. என் வழிகாட்டுதலுக்குக் கட்டுப்படவில்லை. அல்லாஹ்வை நிராகரித்து அந்த நிராகரிப்பில் நிலைத்திருக்கும் ஒரு சமூகத்தின் மீது நான் எவ்வாறு கவலை கொள்வேன்?”