×
نوحவசனம் 7

அல்-முக்தஸர்

وَإِنِّى كُلَّمَا دَعَوْتُهُمْ لِتَغْفِرَ لَهُمْ جَعَلُوٓا۟ أَصَـٰبِعَهُمْ فِىٓ ءَاذَانِهِمْ وَٱسْتَغْشَوْا۟ ثِيَابَهُمْ وَأَصَرُّوا۟ وَٱسْتَكْبَرُوا۟ ٱسْتِكْبَارًا ﴿٧﴾

உன்னை மட்டுமே வணங்கி, உனக்கும் உனது தூதருக்கும் கட்டுப்பட்டு அவர்களின் பாவங்களுக்கான மன்னிப்பைப் பெறுவதற்கு நிச்சயமாக நான் அவர்களை அழைத்தபோதெல்லாம் என் அழைப்பை செவியுறாமல் தடுக்கும்பொருட்டு தங்களின் விரல்களால் காதுகளைப் பொத்திக் கொண்டார்கள். என்னைப் பார்க்காமல் இருக்கும்பொருட்டு தங்களின் ஆடைகளால் முகங்களை மூடிக் கொண்டார்கள். தாங்கள் இருந்துகொண்டிருக்கும் இணைவைப்பிலேயே அவர்கள் நிலைத்திருந்தார்கள். நான் அவர்களை எதனை நோக்கி அழைத்தேனோ அதனை ஏற்றுக் கட்டுப்படுவதை விட்டும் கர்வம் கொண்டார்கள்.