×
الأنفالவசனம் 19

அல்-முக்தஸர்

إِن تَسْتَفْتِحُوا۟ فَقَدْ جَآءَكُمُ ٱلْفَتْحُ ۖ وَإِن تَنتَهُوا۟ فَهُوَ خَيْرٌ لَّكُمْ ۖ وَإِن تَعُودُوا۟ نَعُدْ وَلَن تُغْنِىَ عَنكُمْ فِئَتُكُمْ شَيْـًٔا وَلَوْ كَثُرَتْ وَأَنَّ ٱللَّهَ مَعَ ٱلْمُؤْمِنِينَ ﴿١٩﴾

இணைவைப்பாளர்களே!- அல்லாஹ் வரம்புமீறிய அநியாயக்காரர்கள் மீது தன் வேதனையை இறக்கட்டும் என்று நீங்கள் பிரார்த்தனை செய்தால், நீங்கள் பிரார்த்தித்தவாறே அல்லாஹ் உங்கள்மீது வேதனையை இறக்கிவிட்டான். உங்களுக்குப் பாடமாகவும், இறையச்சமுடையோருக்கு படிப்பினையாகவும் அமையத்தக்க வேதனையை உங்கள் மீது இறக்கியுள்ளான். இவ்வாறு வேண்டுவதை விட்டும் நீங்கள் விலகிக்கொண்டால், அது உங்களுக்குத்தான் நல்லது. ஏனெனில் சிலவேளை உங்களுக்கு அவகாசம் அளித்து உடனுக்குடன் உங்களை பழிவாங்காமல் விட்டுவிடுவான். நீங்கள் மீண்டும் இவ்வாறு வேண்டினால், நம்பிக்கையாளர்களுடன் போரிட்டால் நாமும் அவர்களுக்கு மீண்டும் உதவி செய்து உங்களை வேதனைக்குட்படுத்துவோம். உங்களின் கூட்டத்தினர்களோ உதவியாளர்களோ உங்களுக்கு எந்தப் பயனையும் அளிக்க முடியாது. அவர்கள் ஆள்பலம் ஆயுத பலம் ஆகியவற்றில் அதிகமாகவும் நம்பிக்கையாளர்கள் குறைவாகவும் இருந்தாலும் சரியே. நம்பிக்கையாளர்களுக்கு உதவி செய்வதன் மூலம் அல்லாஹ் அவர்களுடன் இருக்கின்றான். அல்லாஹ் யாருடன் இருக்கின்றானோ அவர்களை யாராலும் மிகைக்க முடியாது.