×
الأنفالவசனம் 2

அல்-முக்தஸர்

إِنَّمَا ٱلْمُؤْمِنُونَ ٱلَّذِينَ إِذَا ذُكِرَ ٱللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ ءَايَـٰتُهُۥ زَادَتْهُمْ إِيمَـٰنًا وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ ﴿٢﴾

உண்மையான நம்பிக்கையாளர்கள் பின்வரும் பண்புகளையுடையோரே. அவர்களிடம் அல்லாஹ்வைக் குறித்து நினைவு கூறப்பட்டால் அவர்களின் உள்ளங்கள் அஞ்சி நடுங்கும். உடலாலும் உள்ளத்தாலும் அவர்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவார்கள். அவனுடைய வசனங்கள் அவர்களிடம் படித்துக் காட்டப்பட்டால் அவற்றில் சிந்தனை செலுத்துவார்கள். அதனால் அவர்களின் நம்பிக்கை இன்னும் அதிகரிக்கும். நன்மைகளைப் பெறுவதற்கும் தங்களை விட்டுத் தீங்குகளை அகற்றுவதற்கும் தங்கள் இறைவனையே அவர்கள் சார்ந்திருப்பார்கள்.