×
الأنفالவசனம் 34

அல்-முக்தஸர்

وَمَا لَهُمْ أَلَّا يُعَذِّبَهُمُ ٱللَّهُ وَهُمْ يَصُدُّونَ عَنِ ٱلْمَسْجِدِ ٱلْحَرَامِ وَمَا كَانُوٓا۟ أَوْلِيَآءَهُۥٓ ۚ إِنْ أَوْلِيَآؤُهُۥٓ إِلَّا ٱلْمُتَّقُونَ وَلَـٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ ﴿٣٤﴾

மஸ்ஜிதுல் ஹராமில் தொழவிடாமல், தவாப் செய்யவிடாமல் மக்களைத் தடுத்ததன் மூலம் தண்டிக்கப்படுவதற்கானவற்றை அவர்கள் செய்திருக்கும் போது, அவர்களுக்கு வேதனை வருவதை எதுதான் தடுக்க முடியும்? இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வின் நேசர்களாக இல்லை. அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்களே அவனுடைய நேசர்களாவர். அல்லாஹ்வின் நேசர்களாக இல்லாத நிலமையில் தங்களை அவனுடைய நேசர்கள் என்று கூறும் அதிகமான இணைவைப்பாளர்கள் (அதனை) அறியமாட்டார்கள்.