×
الأنفالவசனம் 37

அல்-முக்தஸர்

لِيَمِيزَ ٱللَّهُ ٱلْخَبِيثَ مِنَ ٱلطَّيِّبِ وَيَجْعَلَ ٱلْخَبِيثَ بَعْضَهُۥ عَلَىٰ بَعْضٍ فَيَرْكُمَهُۥ جَمِيعًا فَيَجْعَلَهُۥ فِى جَهَنَّمَ ۚ أُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْخَـٰسِرُونَ ﴿٣٧﴾

அல்லாஹ்வின் பாதையை விட்டும் மக்களைத் தடுப்பதற்காக செலவு செய்த இந்த நிராகரிப்பாளர்கள் நரகத்தின்பால் இழுத்துச் செல்லப்படுவதற்கான காரணம், மோசமான நிராகரிப்பாளர்களையும் தூய்மையான நம்பிக்கையாளர்களையும் வேறுபடுத்துவதற்காகவும் கெட்டவற்றை தீய மனிதர்கள், செல்வங்கள் மற்றும் செயல்கள் போன்றவற்றை ஒன்றோடோன்று சேர்த்து குவியலாக்கி அவற்றை நரகத்தில் சேர்த்துவிட வேண்டும் என்பதற்காகவும்தான். இவர்கள்தாம் மறுமை நாளில் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் இழந்ததனால் நஷ்டமடைந்தவர்களாவர்.