அல்-முக்தஸர்
وَإِن تَوَلَّوْا۟ فَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ مَوْلَىٰكُمْ ۚ نِعْمَ ٱلْمَوْلَىٰ وَنِعْمَ ٱلنَّصِيرُ ﴿٤٠﴾
நிராகரிப்பு, அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்தல் ஆகியவற்றிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு அவர்களுக்கு இடப்பட்ட கட்டளைகளை அவர்கள் புறக்கணித்துவிட்டால் - -நம்பிக்கையாளர்களே!- அல்லாஹ் அவர்களுக்கு எதிராக உங்களுக்கு உதவி செய்யக்கூடியவன் என்பதை உறுதியாக அறிந்துகொள்ளுங்கள். தன்னைச் சார்ந்தோருக்கு அவனே மிகச் சிறந்த பொறுப்பாளன், தனக்கு உதவுவோருக்கு மிகச் சிறந்த உதவியாளன். அவன் யாரை பொறுப்பெடுத்துக் கொண்டானோ அவர் வெற்றி பெற்றுவிட்டார். அவன் யாருக்கு உதவி செய்தானோ அவர் உதவி பெற்றுவிட்டார்.