×
الأنفالவசனம் 54

அல்-முக்தஸர்

كَدَأْبِ ءَالِ فِرْعَوْنَ ۙ وَٱلَّذِينَ مِن قَبْلِهِمْ ۚ كَذَّبُوا۟ بِـَٔايَـٰتِ رَبِّهِمْ فَأَهْلَكْنَـٰهُم بِذُنُوبِهِمْ وَأَغْرَقْنَآ ءَالَ فِرْعَوْنَ ۚ وَكُلٌّ كَانُوا۟ ظَـٰلِمِينَ ﴿٥٤﴾

இந்த நிராகரிப்பாளர்களின் நிலைமை இவர்களுக்கு முன்னர் நிராகரித்த பிர்அவ்னின் சமூகம் மற்றும் அவர்களுக்கு முந்தைய நிராகரித்த சமூகங்களை ஒத்திருக்கின்றது. அவர்கள் தங்கள் இறைவனின் சான்றுகளை நிராகரித்தார்கள். அவர்கள் செய்த பாவங்களினால் அல்லாஹ் அவர்களை அழித்துவிட்டான். பிர்அவ்னின் சமூகத்தை அவன் கடலில் மூழ்கடித்து அழித்தான். பிர்அவ்னின் சமூகமும் அவர்களுக்கு முந்தைய சமூகங்களும் அல்லாஹ்வை நிராகரிக்கக்கூடியவர்களாக, அவனுக்கு மற்றவர்களை இணையாக்கக்கூடியவர்களாக இருந்ததனால் அவர்கள் அநியாயக்காரர்களாக இருந்தார்கள். இதன் மூலம் அவர்கள் தங்களை அவனுடைய வேதனைக்குத் தகுதியாக்கிக் கொண்டார்கள். எனவேதான் அவர்கள் மீது தண்டனையை இறக்கினான்.