×
الأنفالவசனம் 58

அல்-முக்தஸர்

وَإِمَّا تَخَافَنَّ مِن قَوْمٍ خِيَانَةً فَٱنۢبِذْ إِلَيْهِمْ عَلَىٰ سَوَآءٍ ۚ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ ٱلْخَآئِنِينَ ﴿٥٨﴾

தூதரே!- உமக்கு விளங்கும் ஏதாவது அடையாளத்தினால் நீர் ஒப்பந்தம் செய்த ஒரு சமூகம் மோசடியில் ஈடுபட்டு ஒப்பந்தத்தை முறித்துவிடும் என்று நீர் அஞ்சினால் அவர்களின் ஒப்பந்தத்தை ரத்துசெய்து அவர்களுக்கு அறிவித்துவிடுவீராக. அப்போதுதான் ஒப்பந்தம் முறிந்த தகவல் இருசாராரிடமும் சமமாகச் சென்றடையும். அவர்களிடம் அறிவிப்பதற்கு முன்பே அவர்களைத் தாக்கிவிடாதீர். ஏனெனில் அவர்களிடம் தெரிவிப்பதற்கு முன்பே அவர்களைத் தாக்குவது துரோகமாகும். துரோகமிழைப்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை. மாறாக அவர்களை அவன் வெறுக்கிறான். எனவே துரோகமிழைப்பதை விட்டும் நீரும் எச்சரிக்கையாக இருப்பீராக.