அல்-முக்தஸர்
وَأَعِدُّوا۟ لَهُم مَّا ٱسْتَطَعْتُم مِّن قُوَّةٍ وَمِن رِّبَاطِ ٱلْخَيْلِ تُرْهِبُونَ بِهِۦ عَدُوَّ ٱللَّهِ وَعَدُوَّكُمْ وَءَاخَرِينَ مِن دُونِهِمْ لَا تَعْلَمُونَهُمُ ٱللَّهُ يَعْلَمُهُمْ ۚ وَمَا تُنفِقُوا۟ مِن شَىْءٍ فِى سَبِيلِ ٱللَّهِ يُوَفَّ إِلَيْكُمْ وَأَنتُمْ لَا تُظْلَمُونَ ﴿٦٠﴾
நம்பிக்கையாளர்களே!- ஈட்டி எறிதல் போன்ற உங்களால் ஆள் மற்றும் ஆயுத பலத்தைத் தயார் செய்துகொள்ளுங்கள். அல்லாஹ்வின் பாதையில் தடுத்துவைக்கப்பட்ட குதிரைகளை தயாராக வைத்திருங்கள். இதன் மூலம் அல்லாஹ்வின் எதிரிகளையும் நீங்கள் காலச்சக்கரத்தின் கேட்டில் சிக்கிக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கும் நிராகரிப்பாளர்களான உங்களின் எதிரிகளையும் இவர்கள் அல்லாத வேறு மக்களையும் நீங்கள் அச்சமுறச் செய்யலாம். நீங்கள் அவர்களையும் அவர்கள் மறைத்து வைத்திருக்கும் பகைமையையும் அறிய மாட்டீர்கள். அல்லாஹ்வே அவர்களையும் அவர்கள் உள்ளத்தில் மறைத்துவைத்திருக்கும் பகைமையையும் அறிவான். நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் குறைவாகவோ அதிகமாகவோ எதைச் செலவு செய்தாலும் இவ்வுலகில் அல்லாஹ் அதனை உங்களுக்கு வழங்குவான். மறுமையில் அதற்கான வெகுமதியை குறைவின்றி நிறைவாக வழங்குவான். அவனுடைய பாதையில் செலவு செய்வதன் பக்கம் விரையுங்கள்.