×
التوبةவசனம் 100

அல்-முக்தஸர்

وَٱلسَّـٰبِقُونَ ٱلْأَوَّلُونَ مِنَ ٱلْمُهَـٰجِرِينَ وَٱلْأَنصَارِ وَٱلَّذِينَ ٱتَّبَعُوهُم بِإِحْسَـٰنٍ رَّضِىَ ٱللَّهُ عَنْهُمْ وَرَضُوا۟ عَنْهُ وَأَعَدَّ لَهُمْ جَنَّـٰتٍ تَجْرِى تَحْتَهَا ٱلْأَنْهَـٰرُ خَـٰلِدِينَ فِيهَآ أَبَدًا ۚ ذَٰلِكَ ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ ﴿١٠٠﴾

தங்களின் நாட்டையும் வீடுகளையும் விட்டு விட்டு அல்லாஹ்வின்பால் புலம்பெயர்ந்தவர்களிலும் தூதருக்கு உதவி செய்த அன்சாரிகளிலும் நம்பிக்கைகொள்வதில் முந்திக்கொண்டவர்கள், மற்றும் முஹாஜிரீன்கள், அன்சாரிகள் என இரு சாராரையும் கொள்கையிலும் சொல்லிலும் செயலிலும் அழகிய முறையில் பின்பற்றியவர்கள் ஆகியோரின் விஷயத்தில் அல்லாஹ் திருப்தியடைந்துவிட்டான். அவர்களின் கீழ்ப்படிதலை ஏற்றுக் கொண்டான். அவர்களுக்கு அவன் வழங்கிய மகத்தான வெகுமதியின் காரணமாக அவர்கள் அவனைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்காக அவன் சுவனங்களை தயார்படுத்தி வைத்துள்ளான். அதன் மாளிகைகளுக்குக் கீழ் ஆறுகள் ஓடும். அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். இந்த வெகுமதியே மகத்தான வெற்றியாகும்.