×
التوبةவசனம் 120

அல்-முக்தஸர்

مَا كَانَ لِأَهْلِ ٱلْمَدِينَةِ وَمَنْ حَوْلَهُم مِّنَ ٱلْأَعْرَابِ أَن يَتَخَلَّفُوا۟ عَن رَّسُولِ ٱللَّهِ وَلَا يَرْغَبُوا۟ بِأَنفُسِهِمْ عَن نَّفْسِهِۦ ۚ ذَٰلِكَ بِأَنَّهُمْ لَا يُصِيبُهُمْ ظَمَأٌ وَلَا نَصَبٌ وَلَا مَخْمَصَةٌ فِى سَبِيلِ ٱللَّهِ وَلَا يَطَـُٔونَ مَوْطِئًا يَغِيظُ ٱلْكُفَّارَ وَلَا يَنَالُونَ مِنْ عَدُوٍّ نَّيْلًا إِلَّا كُتِبَ لَهُم بِهِۦ عَمَلٌ صَـٰلِحٌ ۚ إِنَّ ٱللَّهَ لَا يُضِيعُ أَجْرَ ٱلْمُحْسِنِينَ ﴿١٢٠﴾

மதீனாவாசிகளுக்கும் அவர்களைச் சுற்றியுள்ள நாட்டுப்புறவாசிகளுக்கும் அல்லாஹ்வின் தூதர் போருக்காகப் புறப்பட்டால் அவரை விட்டுப் பின்தங்குவதோ அவரின் உயிரைவிட தங்களின் உயிரை பெரிதாக எண்ணுவதோ உகந்ததல்ல. மாறாக அவர்கள் தூதருக்காக தம் உயிரை அர்ப்பணிக்க வேண்டும். ஏனெனில் அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஏற்படும் தாகம், களைப்பு, பசி மற்றும் நிராகரிப்பாளர்களை ஆத்திரமூட்டுவதற்காக அவர்களின் ஊர்களில் அவர்கள் எடுத்துவைக்கும் காலடிகள், எதிரிகளைக் கொல்லுதல், கைதிகளாகப் பிடித்தல், போர்ச் செல்வங்களையோ தோல்வியையோ பெறுதல் என ஒவ்வொன்றுக்கும் பகரமாக அவர்களுக்கு நன்மை எழுதப்படுகிறது. நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோரின் கூலியை வீணாக்கிவிடுவதில்லை. மாறாக அவன் அவர்களுக்கு அதனை முழுமையாகவும் இன்னும் அதிகமாகவும் வழங்கிவிடுகிறான்.