×
التوبةவசனம் 122

அல்-முக்தஸர்

وَمَا كَانَ ٱلْمُؤْمِنُونَ لِيَنفِرُوا۟ كَآفَّةً ۚ فَلَوْلَا نَفَرَ مِن كُلِّ فِرْقَةٍ مِّنْهُمْ طَآئِفَةٌ لِّيَتَفَقَّهُوا۟ فِى ٱلدِّينِ وَلِيُنذِرُوا۟ قَوْمَهُمْ إِذَا رَجَعُوٓا۟ إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ ﴿١٢٢﴾

நம்பிக்கையாளர்கள் அனைவரும் போருக்குப் புறப்படுவது உகந்ததல்ல. ஏனெனில் எதிரிகளின் ஆதிக்கத்தால் அவர்கள் அனைவரும் அழிக்கப்பட்டு விடக்கூடாது. அவர்களில் ஒரு பிரிவினர் போருக்குப் புறப்பட்டு, ஒரு பிரிவினர் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து செவிமடுக்கும் குர்ஆன் மார்க்க சட்ட திட்டங்கள் மூலம் மார்க்கத்தில் தெளிவு பெற்று தங்களின் சமூகத்தார் திரும்பி வரும்போது தாம் கற்றவற்றைக் கொண்டு அவர்களை எச்சரிப்பதற்கு நபியவர்களுடன் தங்கிவிடக்கூடாதா? அல்லாஹ்வின் வேதனையை விட்டு எச்சரிக்கையாக இருப்பதற்கும் அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகியிருப்பதற்கும் அது வழிவகுக்கலாம். இது நபியவர்கள் அனுப்பிய சிறுசிறு படைகள் தொடர்பாக இறக்கப்பட்ட கட்டளையாகும். அவர்கள் தனது தோழர்களில் ஒரு பிரிவினரை தேர்ந்தெடுத்து அனுப்பிவைப்பார்கள்.