அல்-முக்தஸர்
إِنَّمَا يَعْمُرُ مَسَـٰجِدَ ٱللَّهِ مَنْ ءَامَنَ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْـَٔاخِرِ وَأَقَامَ ٱلصَّلَوٰةَ وَءَاتَى ٱلزَّكَوٰةَ وَلَمْ يَخْشَ إِلَّا ٱللَّهَ ۖ فَعَسَىٰٓ أُو۟لَـٰٓئِكَ أَن يَكُونُوا۟ مِنَ ٱلْمُهْتَدِينَ ﴿١٨﴾
அல்லாஹ்வுக்கு இணையாக எதையும் ஆக்காமல் அவன் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டு, தொழுகையைக் கடைப்பிடித்து தங்களின் செல்வங்களிலிருந்து ஸகாத்தை வழங்கி அல்லாஹ்வுக்கு மட்டுமே அஞ்சக்கூடியவர்கள்தாம் அவனுடைய ஆலயங்களைப் பராமரிக்கத் தகுதியானவர்கள். ஏனெனில் இவர்கள்தாம் நேரான வழியில் இருக்கக்கூடியவர்கள். இணைவைப்பாளர்களோ நேர்வழியை விட்டும் வெகுதூரமானவர்கள்.