×
التوبةவசனம் 3

அல்-முக்தஸர்

وَأَذَٰنٌ مِّنَ ٱللَّهِ وَرَسُولِهِۦٓ إِلَى ٱلنَّاسِ يَوْمَ ٱلْحَجِّ ٱلْأَكْبَرِ أَنَّ ٱللَّهَ بَرِىٓءٌ مِّنَ ٱلْمُشْرِكِينَ ۙ وَرَسُولُهُۥ ۚ فَإِن تُبْتُمْ فَهُوَ خَيْرٌ لَّكُمْ ۖ وَإِن تَوَلَّيْتُمْ فَٱعْلَمُوٓا۟ أَنَّكُمْ غَيْرُ مُعْجِزِى ٱللَّهِ ۗ وَبَشِّرِ ٱلَّذِينَ كَفَرُوا۟ بِعَذَابٍ أَلِيمٍ ﴿٣﴾

இது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் இணைவைப்பாளர்களை விட்டும் விலகிக் கொண்டார்கள் என்று அறுக்கப்படும் ஹஜ்ஜுடைய நாளில் மக்கள் அனைவருக்கும் செய்யப்படும் அறிவிப்பாகும். -இணைவைப்பாளர்களே!- நீங்கள் உங்கள் இணைவைப்பிலிருந்து பாவமன்னிப்புக் கோரினால் அது உங்களுக்குத்தான் நல்லது. நீங்கள் பாவமன்னிப்புக் கோராமல் புறக்கணித்தால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தண்டனையிலிருந்தும் உங்களால் ஒருபோதும் தப்பிவிட முடியாது என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். தூதரே! அல்லாஹ்வை நிராகரிப்பவர்களுக்கு வேதனைமிக்க தண்டனை காத்திருக்கின்றது எனவும் அறிவித்து விடுவீராக.