அல்-முக்தஸர்
يُرِيدُونَ أَن يُطْفِـُٔوا۟ نُورَ ٱللَّهِ بِأَفْوَٰهِهِمْ وَيَأْبَى ٱللَّهُ إِلَّآ أَن يُتِمَّ نُورَهُۥ وَلَوْ كَرِهَ ٱلْكَـٰفِرُونَ ﴿٣٢﴾
இந்த நிராகரிப்பாளர்களும் அந்நிய மதத்தினர்களும் தமது இட்டுக்கட்டல்கள் மூலமும் முஹம்மது கொண்டு வந்ததை நிராகரிப்பதன் மூலமும் இஸ்லாத்தையும் அதிலுள்ள ‘அல்லாஹ்வின் ஏகத்துவம், அவனுடைய தூதர் கொண்டுவந்தது உண்மை’ என்பதற்கான தெளிவான ஆதாரங்களையும் சான்றுகளையும் அழித்துவிட நாடுகிறார்கள். ஆனால் அல்லாஹ் தன் மார்க்கத்தை முழுமைப்படுத்தியே தீருவான். நிராகரிப்பாளர்கள் வெறுத்தபோதிலும் மற்ற மார்க்கங்களைவிட அதனை மேலோங்கச் செய்தே தீருவான். நிச்சயமாக அல்லாஹ் அதனை பூர்த்தி செய்து, வெளிப்படுத்தி, மேலோங்கச் செய்வான். அல்லாஹ் ஏதேனும் ஒன்றை நாடிவிட்டால் மற்றவர்களின் நாட்டம் நடைபெறாது.