×
التوبةவசனம் 50

அல்-முக்தஸர்

إِن تُصِبْكَ حَسَنَةٌ تَسُؤْهُمْ ۖ وَإِن تُصِبْكَ مُصِيبَةٌ يَقُولُوا۟ قَدْ أَخَذْنَآ أَمْرَنَا مِن قَبْلُ وَيَتَوَلَّوا۟ وَّهُمْ فَرِحُونَ ﴿٥٠﴾

அல்லாஹ்வின் தூதரே!- அல்லாஹ்வின் அருளான உமக்கு மகிழ்ச்சியளிக்கும் வெற்றியோ போர்ச் செல்வங்களோ கிடைத்தால் அதனை அவர்கள் வெறுக்கிறார்கள். அதற்காக கவலைப்படுகிறார்கள். உமக்கு துன்பமோ தோல்வியோ கிடைத்து விட்டால் இந்த நயவஞ்சகர்கள் கூறுகிறார்கள்: “நம்மை நாம் காத்துக் கொண்டோம் உறுதியான முடிவெடுத்து நம்பிக்கையாளர்கள் போருக்குச் சென்றது போல் நாம் போருக்குச் செல்லவில்லை. அவர்கள் சென்றதனால் கொலையுண்டு கைதுக்கும் ஆளானார்கள். ”பின்னர் இந்த நயவஞ்சகர்கள் தப்பிய மகிழ்ச்சியுடன் தங்களின் குடும்பத்தாரிடம் திரும்பிச் செல்கிறார்கள்.