×
التوبةவசனம் 6

அல்-முக்தஸர்

وَإِنْ أَحَدٌ مِّنَ ٱلْمُشْرِكِينَ ٱسْتَجَارَكَ فَأَجِرْهُ حَتَّىٰ يَسْمَعَ كَلَـٰمَ ٱللَّهِ ثُمَّ أَبْلِغْهُ مَأْمَنَهُۥ ۚ ذَٰلِكَ بِأَنَّهُمْ قَوْمٌ لَّا يَعْلَمُونَ ﴿٦﴾

தூதரே! உயிரும் உடமையும் ஆகுமாக்கப்பட்ட இணைவைப்பாளர்களில் யாரேனும் உம்மிடம் வந்து பாதுகாவல் கோரினால் அவர்கள் குர்ஆனைச் செவியுறும் பொருட்டு அவர்களுக்குப் பாதுகாவல் அளிப்பீராக. பின்னர் பாதுகாப்பான இடத்தில் அவரைச் சேர்த்து விடுவீராக. ஏனெனில் நிராகரிப்பாளர்கள் இந்த மார்க்கத்தின் உண்மை நிலையை அறியாத மக்களாக இருக்கிறார்கள். அவர்கள் குர்ஆனை செவியேற்பதன் மூலம் இதன் உண்மை நிலையை அறிந்து கொண்டால் சில வேளை நேர்வழியடையலாம்.