அல்-முக்தஸர்
أَلَمْ يَعْلَمُوٓا۟ أَنَّهُۥ مَن يُحَادِدِ ٱللَّهَ وَرَسُولَهُۥ فَأَنَّ لَهُۥ نَارَ جَهَنَّمَ خَـٰلِدًا فِيهَا ۚ ذَٰلِكَ ٱلْخِزْىُ ٱلْعَظِيمُ ﴿٦٣﴾
இந்த நயவஞ்சகர்கள் தங்களின் இச்செயல்களின் மூலம் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்த்துக் கொண்டுள்ளனர் என்பதையும், அவ்வாறு அவ்விருவரையும் எதிர்ப்போர் மறுமை நாளில் நரக நெருப்பில் நுழைந்து அங்கு நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பார் என்பதையும் அவர்கள் அறியவில்லையா?! அதுவே அவமானமும் பெரும் இழிவுமாகும்.