×
التوبةவசனம் 67

அல்-முக்தஸர்

ٱلْمُنَـٰفِقُونَ وَٱلْمُنَـٰفِقَـٰتُ بَعْضُهُم مِّنۢ بَعْضٍ ۚ يَأْمُرُونَ بِٱلْمُنكَرِ وَيَنْهَوْنَ عَنِ ٱلْمَعْرُوفِ وَيَقْبِضُونَ أَيْدِيَهُمْ ۚ نَسُوا۟ ٱللَّهَ فَنَسِيَهُمْ ۗ إِنَّ ٱلْمُنَـٰفِقِينَ هُمُ ٱلْفَـٰسِقُونَ ﴿٦٧﴾

நயவஞ்சகர்களான ஆண்களும் பெண்களும் நயவஞ்சகப் பண்புகளில் ஒன்றுபட்டவர்களே. அவர்கள் தீமை செய்யத் தூண்டுகிறார்கள். நன்மையை விட்டும் தடுக்கிறார்கள். தங்களின் செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாமல் கஞ்சத்தனம் செய்கிறார்கள். அல்லாஹ்வுக்கு வழிபடுதை விட்டுவிட்டார்கள். எனவே அல்லாஹ்வும் அவர்களுக்கு உதவுவதை விட்டுவிட்டான். நிச்சயமாக இந்த நயவஞ்சகர்களே அல்லாஹ்வுக்குக் அடிபணியாதவர்கள். சத்தியப் பாதையிலிருந்து பாவம் மற்றும் வழிகேட்டை நோக்கி வெளியேறியவர்கள்.