×
التوبةவசனம் 71

அல்-முக்தஸர்

وَٱلْمُؤْمِنُونَ وَٱلْمُؤْمِنَـٰتُ بَعْضُهُمْ أَوْلِيَآءُ بَعْضٍ ۚ يَأْمُرُونَ بِٱلْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ ٱلْمُنكَرِ وَيُقِيمُونَ ٱلصَّلَوٰةَ وَيُؤْتُونَ ٱلزَّكَوٰةَ وَيُطِيعُونَ ٱللَّهَ وَرَسُولَهُۥٓ ۚ أُو۟لَـٰٓئِكَ سَيَرْحَمُهُمُ ٱللَّهُ ۗ إِنَّ ٱللَّهَ عَزِيزٌ حَكِيمٌ ﴿٧١﴾

நம்பிக்கைகொண்ட ஆண்களும் பெண்களும் அவர்களை ஒன்றிணைக்கும் நம்பிக்கையின் காரணமாக ஒருவருக்கொருவர் உதவியாளர்களாக இருக்கின்றார்கள். அல்லாஹ்வுக்கு விருப்பமான ஏகத்துவம் தொழுகை போன்ற பல்வேறு நற்காரியங்களையும் செய்யத் தூண்டுகிறார்கள்; நிராகரிப்பு, வட்டி போன்ற அல்லாஹ் வெறுக்கும் அனைத்துவிதமான தீயகாரியங்களை விட்டும் தடுக்கிறார்கள். தொழுகையை பரிபூரணமான முறையில் நிறைவேற்றுகிறார்கள்; அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுகிறார்கள். சிறப்பிற்குரிய இந்த பண்புகளை உடையவர்களை அல்லாஹ் தன் அருளில் பிரவேசிக்கச் செய்வான். அவன் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. தன் படைப்பில், தன் திட்டமிடலில், தான் வழங்கும் சட்டங்களில் அவன் ஞானம்மிக்கவன்.