அல்-முக்தஸர்
يَحْلِفُونَ بِٱللَّهِ مَا قَالُوا۟ وَلَقَدْ قَالُوا۟ كَلِمَةَ ٱلْكُفْرِ وَكَفَرُوا۟ بَعْدَ إِسْلَـٰمِهِمْ وَهَمُّوا۟ بِمَا لَمْ يَنَالُوا۟ ۚ وَمَا نَقَمُوٓا۟ إِلَّآ أَنْ أَغْنَىٰهُمُ ٱللَّهُ وَرَسُولُهُۥ مِن فَضْلِهِۦ ۚ فَإِن يَتُوبُوا۟ يَكُ خَيْرًا لَّهُمْ ۖ وَإِن يَتَوَلَّوْا۟ يُعَذِّبْهُمُ ٱللَّهُ عَذَابًا أَلِيمًا فِى ٱلدُّنْيَا وَٱلْـَٔاخِرَةِ ۚ وَمَا لَهُمْ فِى ٱلْأَرْضِ مِن وَلِىٍّ وَلَا نَصِيرٍ ﴿٧٤﴾
நாம் உம்மைத் திட்டி, உமது மார்க்கத்தைக் குறை கூறியதாக உமக்குக் கிடைத்த தகவல் தவறானது அவ்வாறு தாம் எதுவும் கூறவில்லை என்று நயவஞ்சகர்கள் அல்லாஹ்வின் மீது பொய்யாக சத்தியமிட்டுக் கூறுகிறார்கள். உண்மையில் அவர்கள் நிராகரிப்புக்குரிய அவற்றைக் கூறியே உள்ளனர். அவர்கள் ஈமானை வெளிப்படுத்திய பிறகு நிராகரிக்கும் வார்த்தையைக் கூறிவிட்டார்கள். நபியவர்களை படுகொலை செய்வதற்குக் கூட முயற்சித்தனர். ஆனால் அவர்களுக்குச் சாத்தியப்படவில்லை. யாரும் மறுக்காத ஒன்றை அவர்கள் மறுத்துள்ளனர். அதுதான் தன் தூதருக்கு அளித்த போர்ச் செல்வங்களைக் கொண்டு அல்லாஹ் அவர்களை செல்வந்தர்களாக ஆக்கியதாகும். தங்களின் நயவஞ்சகத்தனத்திலிருந்து அவர்கள் அல்லாஹ்வின் பக்கம் மீண்டால் அதிலே தொடர்ந்திருப்பதை விட அது அவர்களுக்கு சிறந்ததாகும். அல்லாஹ்விடம் மீளாமல் அவர்கள் புறக்கணித்து விட்டால் இவ்வுலகில் கொன்றும் கைதிகளாகப் பிடித்தும் மறுமையில் நெருப்பினால் வேதனை செய்தும் அல்லாஹ் அவர்களைத் தண்டிப்பான். வேதனையிலிருந்து அவர்களைக் காப்பாற்றும் பாதுகாவலர்களோ அதனைத் தடுக்கும் உதவியாளர்களோ அவர்களுக்கு இருக்க மாட்டார்கள்.