×
التوبةவசனம் 8

அல்-முக்தஸர்

كَيْفَ وَإِن يَظْهَرُوا۟ عَلَيْكُمْ لَا يَرْقُبُوا۟ فِيكُمْ إِلًّا وَلَا ذِمَّةً ۚ يُرْضُونَكُم بِأَفْوَٰهِهِمْ وَتَأْبَىٰ قُلُوبُهُمْ وَأَكْثَرُهُمْ فَـٰسِقُونَ ﴿٨﴾

உங்களின் எதிரிகளான அவர்களுக்கு எவ்வாறு ஒப்பந்தமும் பாதுகாப்பும் இருக்க முடியும்? அவர்கள் உங்களை வென்று விட்டால் உங்கள் விஷயத்தில் அல்லாஹ்வையோ ஒப்பந்தத்தையோ உறவையோ பொருட்படுத்த மாட்டார்கள். மாறாக உங்களைக் கொடிய வேதனையில் ஆழ்த்திவிடுவார்கள். அவர்களின் நாவுகள் உச்சரிக்கும் அழகிய வார்த்தைகளால் உங்களைத் திருப்திப்படுத்த முயற்சிக்கிறார்கள். ஆனால் அவர்களின் உள்ளங்களோ நாவுகள் கூறுவதற்கு இணங்கவில்லை. அவர்கள் கூறுவதை நிறைவேற்ற மாட்டார்கள். அவர்களில் பெரும்பாலோர் ஒப்பந்தத்தை முறித்ததனால் அல்லாஹ்வுக்கு அடிபணியாதவர்களே.