அல்-முக்தஸர்
وَلَا تُعْجِبْكَ أَمْوَٰلُهُمْ وَأَوْلَـٰدُهُمْ ۚ إِنَّمَا يُرِيدُ ٱللَّهُ أَن يُعَذِّبَهُم بِهَا فِى ٱلدُّنْيَا وَتَزْهَقَ أَنفُسُهُمْ وَهُمْ كَـٰفِرُونَ ﴿٨٥﴾
தூதரே!- இந்த நயவஞ்சகர்களின் செல்வங்களோ பிள்ளைகளோ உம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட வேண்டாம். அல்லாஹ் அவற்றைக் கொண்டு இவ்வுலக வாழ்வில் அவர்களைத் தண்டிக்க விரும்புகிறான். அது அவற்றை அடைவதில் அவர்கள் எதிர்நோக்கும் கஷ்டங்களும் அவற்றில் அவர்களுக்கு ஏற்படும் துன்பங்களுமாகும். மேலும் அவர்கள் நிராகரித்த நிலையிலேயே அவர்களின் உயிர்களும் பிரிய வேண்டும் எனவும் அல்லாஹ் விரும்புகிறான்.